Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

இலங்கையில் மீண்டும் மின்வெட்டு - வெளியானது அறிவிப்பு!


நாட்டில் மீண்டும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, சில பகுதிகளில் அரை மணி நேரம் அல்லது 45 நிமிடங்களுக்கு மின் விநியோகம் தடைப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,  

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் உற்பத்தித் திறன் முழுமையடையாத காரணத்தினால் சில பிரதேசங்கள் மின்வெட்டுக்கு முகங்கொடுக்க நேரிடும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

தேசிய மின் கட்டமைப்பிற்கு 900 மெகாவாட் முழு கொள்ளளவை இணைக்கும் மற்றும் பழுதுபார்க்கும் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்

Post a Comment

0 Comments