இலங்கையில் ஒமிக்ரோன் தொற்றாளர்களின் எண்ணிக்கை 7ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.
இறுதியாக மேலும் 3 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அடையாளம் காணப்பட்ட மூவரும் வெளிநாடுகளிலிருந்து வருகைத் தந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் அடையாளம் காணப்பட்ட 7 பேரில், ஒருவர் மாத்திரம் நாட்டை விட்டு வெளியேறியிருந்தார்.
இந்திய நாட்டு பிரஜை ஒருவரே இவ்வாறு நாட்டை விட்டு வெளியேறியதாக தெரியவந்தது.
0 Comments