Home » » தந்தை, சித்தப்பாவால் கொடூரமாக அடித்து கொல்லப்பட்ட சிறுமி

தந்தை, சித்தப்பாவால் கொடூரமாக அடித்து கொல்லப்பட்ட சிறுமி

 


கம்பளையில் சிறுமி ஒருவர் அவர்களின் உறவினர்களால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மவுன்ட்டெம்பல் பகுதியில் வசித்து வந்த சிறுமி, அவரின் தந்தை மற்றும் சித்தப்பா ஆகியோரினால் தாக்கப்பட்டு கொலை செய்யபட்டிருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் உயிரிழந்த சிறுமியின் சகோதரி முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளார். உறவின பெண் ஒருவரின் காதல் விவகாரத்திற்காக உதவி புரிந்தமைக்காக சிறுமி மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த 13ஆம் திகதி அங்கம்மனையில் உள்ள சித்தப்பாவின் வீட்டிற்கு குறித்த சிறுமி அழைத்துச் செல்லப்பட்டிருந்தார். சித்தப்பாவின் மகள் மற்றும் தாயாரின் துணைக்காக குறித்த சிறுமி இவ்வாறு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

சில நாட்கள் அங்கு இருந்த அவர், கடந்த 19ம் திகதி மீண்டும் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார். இதனை அடுத்து அவர் பல முறை வாந்தி எடுத்துள்ளார். மேலும் சித்தப்பா தன்னை அடித்ததாக பெற்றோரிடம் கூறியுள்ளார்.

குறித்த சிறுமி தனது சித்தப்பாவின் மகளின் காதல் விவகாரம் குறித்த தகவலை மறைத்ததாக கூறப்படுகிறது. பின்னர் கடந்த 21ஆம் திகதி அவரது உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து, அன்று காலை சிறுமியின் தந்தையும் அவளைத் தாக்கியுள்ளார்.

அந்தப் பகுதியை சேர்ந்தவர்கள் சிறுமியை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முற்பட்ட போதிலும் தந்தை அதற்கு அனுமதிக்காததால் சிறுமி வீட்டில் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் கம்பளை நீதவான் குறித்த வீட்டுக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டிருந்தார்.

சம்பவம் தொடர்பில் உயிரிழந்த சிறுமியின் சகோதரி நீதவானிடம் கருத்துத் தெரிவிக்கையில், “அக்கா புலம்புவதாக தெரிவித்து அதிகாலை 2 மணிக்கு அப்பா அக்காவை அடித்தார். கால் பகுதிக்கு தாக்கினார். பின்னர் அக்கா அறைக்கு சென்று தூங்கினார். பின்னரும் புலம்பியதால் அக்காவை வௌியே கொண்டு வந்த விட்டார்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |