அம்பாறையில் பிள்ளையார் சிலை உடைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்பாறை திருக்கோவில் பொலிஸ்ப் பிரிவுக்குட்பட்ட அக்கரைப்பற்று பொத்துவில் பிரதான வீதியில் கஞ்சிகுடிச்சாறு சந்தியில் வைக்கப்பட்ட பிள்ளையார் சிலையே விஷமிகளால் உடைக்கப்பட்டுள்ளதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இப்பிள்ளையார் சிலையானது மக்களின் கோரிக்கைக்கு அமைவாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேனவினால் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சிலை திருக்கோவில் கஞ்சிகுடிச்சாறு கிராமத்துக்குச் செல்லும் பொத்துவில் பிரதான வீதியில் வைக்கப்பட்டிருந்ததுடன் பிள்ளையார் சிலையினை அப்பகுதியில் வாழும் மக்களும் வீதியால் செல்வோரும் வழிபட்டு வந்தனர்.
இந்நிலையில் நேற்று இரவு இனம் தெரியாத நபர்களால் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் நீர் வழங்கல் அமைச்சரின் இணைப்பாளர் பி.எச்.கிருத்திகன் சம்பவ இடத்திற்கு சென்னு பார்வையிட்டிருந்ததுடன் விநாயகர் சிலையினை தான் புனரமைத்து தருவதாகவும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது
0 comments: