இலங்கையின் தென்கிழக்குப் பகுதியில் வங்கக்கடலில் தற்போது ஒரு தாழமுக்கம் உருவாகியுள்ளது. இது கிழக்கு வடகிழக்கு திசையில் நகரும் வாய்ப்புள்ளதாக யாழ். பல்கலைக்கழகத்தின் புவியியல்துறை விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா (Nagamuththu Pratheeparajah) தெரிவித்துள்ளார்.
இதனால் எதிர்வரும் 20.12.2021 வரை வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் பரவலாக மிதமானது முதல் கன மழை கிடைக்க வாய்ப்புள்ளது எனவும், குறிப்பாக யாழ். மாவட்டத்திற்கு கன மழை கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
சீரற்ற வானிலை குறித்து தனது முகநூல் பக்கித்தில் இன்று இதுகுறித்த தகவலை வெளியிட்டுள்ளார். குறித்த பதிவில்,
பொதுவாக வங்காள விரிகுடாவில் உருவாகும் தாழமுக்கங்கள் மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகர்வதே வழமையாகும். ஆனால் இந்த தாழமுக்கம் வழமைக்கு மாறாக கிழக்கு வடகிழக்கு திசையில் நகர்வது கவனிக்கத்தக்கது.
அத்தோடு எதிர்வரும் ஜனவரி மாதத்தின் பிற்பகுதி வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு கன மழைக்கான வாய்ப்புக்கள் உள்ளதாக பதிவிட்டுள்ளார்
0 Comments