Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

இறக்காமம் பிரதேச "கலைஞர்கள் சேமநலன் விசாரிப்பு - 2021" நிகழ்வு !

 


நூருல் ஹுதா உமர்


கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசணையில் தேசத்தின் கலை மற்றும் கலாசாரத்தினை மிளிரச் செய்யும் பொருட்டு காலந்தொட்டு கலைஞர்களால் ஆற்றும் அரும் பெரும் சேவையை கௌரவித்து தற்போது வயோதிபம் மூலமாக சுகவீனமுற்றுள்ள மூத்த கலைஞர்களை சேமநலன் விசாரிக்கும் நிகழ்வு ஒவ்வொரு வருடமும் இடம்பெற்று வருகின்றது. அந்த அடிப்படையில் இறக்காமம் பிரதேச செயலக பிரிவில் 2021 ஆம் ஆண்டிற்கான கலைஞர்கள் சேமநலன் விசாரிப்பு, சுகயீனம் காரணமாக  வரமுடியால் இருந்த கலைஞர்களை வீடு தேடிச் சென்று நலம் விசாரித்து உலர் உணவு பொதி வழங்கிவைக்கும் நிகழ்வு கலாச்சார அதிகார சபையின் ஏற்பாட்டில் இறக்காமம் உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. அஹமட் நஸீல் தலைமையில் வியாழக் கிழமை இடம்பெற்றது.

பிரதேச செயலக கலாச்சார பிரிவின் அனுசரைணையில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு கலாச்சார உத்தியோகத்தர் ஏ.எல். பரீனா, கலாச்சார உத்தியோகத்தர் டப்யூ.டி. வசந்தா, கலாச்சார அதிகார சபை சார்பாக உளவளத்துணை உத்தியோகத்தர் ஏ.எச்.றகீப் ஆகியோர்  நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments