ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் சர்வதேசத்துடன் இணைந்து பணியாற்றும் கட்சிகள் என எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல (Lakshman Kiriella) இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு மாதத்திற்குள் ஐரோப்பிய ஒன்றியத்திடம் இருந்து ஆடை ஏற்றுமதிக்கான ஜீ.எஸ்.டி.பிளஸ் சலுகையை பெற்றுக்கொண்டோம்.
எனினும் தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு ஆண்டில் ஐக்கிய நாடுகள் அமைப்பை பகைத்துக்கொண்டது.
எமது அரசாங்கமாக இருந்தால், கடனை இலகு தவணையில் செலுத்தும் பின்னணியை ஏற்படுத்திக்கொண்டிருப்போம்.
மகிந்த ராஜபக்ச சென்ற பாதையிலேயே கோட்டாபய ராஜபக்ச செல்கிறார். முதலாவது வருடத்திலேயே ஐக்கிய நாடுகள் அமைப்பை பகைத்துக்கொண்டார்.
ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச் சலுகை பற்றி மீள் பரிசீலனை செய்யப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்தது. அடுத்த மாதம் என்ன நடக்குமோ என்பது தெரியாது எனவும் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.
0 Comments