அடுத்த வாரம் நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளும் முழுமையாக ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், பாடசாலை மாணவர்களை பாதுகாப்பதுடன் அவர்கள் தொடர்ந்தும் பாடசாலைக்கு செல்வதை உறுதிப்படுத்துவது பெற்றோராகிய அனைவரினதும் பொறுப்பாகும் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே(sudarshani-fernandopulle) தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்;
“நோயாளிகள் பதிவாகும் சிறிய பிரிவுகளை அடையாளம் கண்டு, அவற்றை முறையான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு அரச தலைவர் பணிப்புரை விடுத்துள்ளார்.
குறிப்பாக பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் இவ்விடயத்தில் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
மாணவர்களுக்கு காய்ச்சல், சளி, இருமல் இருந்தால், பெற்றோரிடம் கொண்டு வந்து ஒப்படைக்கவும். மாணவர்களுக்கு காய்ச்சல் அல்லது இருமல் இருந்தால், பெற்றோர்கள் தங்கள் குழந்தையை வீட்டிலேயே வைத்திருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ஒருவேளை இது கொவிட் நோயின் அறிகுறியாக கூட இருக்கலாம். மேலும், சளி காய்ச்சல், இருமல், இருந்தால் வேலைக்குச் செல்ல வேண்டாம். உங்கள் சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகத்திலிருந்து தேவையான விரைவான ரபிட் அன்டிஜன் பரிசோதனைகளை மேற்கொள்ளுங்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
0 Comments