Advertisement

Responsive Advertisement

டொலர் நெருக்கடிக்கு இந்தியாவிடம் இருந்து 500 மில்லியன் டொலர் வாங்க நடத்திய பேச்சுவாரத்தை வெற்றி.

 


டொலர் நெருக்கடிக்கு இந்தியாவிடம் இருந்து 500 மில்லியன் டொலர் வாங்க நடத்திய பேச்சுவாரத்தை வெற்றி.  

டொலர் பற்றாக்குறையை ஈடுசெய்ய  500 மில்லியன் டொலர் கடனைப் பெறுவதற்கு இந்திய அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தை வெற்றியடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இது தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அரசாங்கப் பிரதிநிதி ஒருவர் அடுத்த வாரம் இந்தியாவிற்கு விஜயம் செய்ய உள்ளார்.


இதேவேளை, பெற்றோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களை கொள்வனவு செய்வதில் தனது பங்களிப்பை அதிகரிப்பது குறித்தும் இந்தியன் ஓயில் நிறுவனம் (IOC) பரிசீலித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.


இதன் மூலம் இந்தியாவுடனான தற்போதைய கலந்துரையாடல்கள் மற்றும் ஒப்பந்தங்களின்படி நாட்டுக்குத் தேவையான எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதில் ஏற்பட்டுள்ள டொலர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என தெரிவிக்கப்படுகிறது.


இதேவேளை  கடந்த திங்கட்கிழமை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் டொலர் நெருக்கடி குறித்து தீவிரமாக விவாதிக்கப்பட்டதாகவும், எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு மாதாந்தம் 350 மில்லியன் டொலர்கள் தேவைப்படுவதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்திருந்தார்.  


சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடனைப் பெறுவதே நாட்டின் கடுமையான நெருக்கடிக்கு ஒரே தீர்வு என அரசாங்க அமைச்சர்கள் குழுவொன்று கருத்து தெரிவித்துள்ளதுடன் , பந்துல குணவர்தன, வாசுதேவ நாணயக்கார உள்ளிட்ட அமைச்சர்கள் குழு இங்கு கடன்பெறுவதற்கு பல   நிபந்தனைகளுக்கு இணங்க வேண்டும் என சுட்டிக்காட்டி எதிர்ப்புத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments