சிஹாரா லத்தீப்)
கிழக்கு மாகாணத்தின் முன்னணிப் பாடசாலைகளில் ஒன்றான மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா வித்தியாலய தேசிய பாடசாலையில் இதுவரைகாலமும் எதிர்நோக்கி வந்த கட்டட வசதி இல்லாத பிரச்சினையை தீர்க்க மத்திய கல்வி அமைச்சு சுமார் ஆறு கோடி ரூபாய் செலவில் புதிய மூன்று மாடி நிர்வாகக் கட்டிடத் தொகுதி ஒன்றை கட்டி முடித்துள்ளது
இப் புதிய மூன்று மாடி கட்டிட தொகுதியினை இராமகிருஷ்ண மிஷன் இலங்கை கிளையின் தலைவர் ஸ்ரீமத் சுவாமி அக்ஷயா னந்தாஜி மஹராஜ் பிரதம அதிதியாக கலந்து கொண்டுசம்பிரதாய பூர்வமாக திறந்துவைத்தார்.
பாடசாலை அதிபர் என். சந்திரகுமார் தலைமையில் நடைபெற்ற இத்திறப்புவிழா வைபவத்தில் மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி சுஜாதா குலேந்திரகுமார் , ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் மட்டக்களப்பு கிளையின் முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி தக்சயானந்தாஜி மஹராஜ் வலயக் கல்வி அலுவலக பொறியியலாளர்ஏ. சுரேஷ்குமார் உள்ளிட்ட பல பிரமுகர்களும் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர் .
இப்புதிய கட்டிட தொகுதியில் தொழில்நுட்ப பிரிவு கணிதப்பாட ஆய்வுக்கூடம், நிர்வாக அலுவலகங்கள் உட்பட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
0 Comments