அநுராதபுரம், அம்பாறை, ஹம்பாந்தோட்டை, மாத்தறை மற்றும் காலி ஆகிய ஐந்து மாவட்டங்களில் மீண்டும் கொரோனா கொத்தணி பரவும் அபாயம் இருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன (Dr. Asela Gunawardena)தெரிவித்துள்ளார்.
“பல்வேறு இடங்களில் திருவிழாக்கள், திருமணங்கள், தொடர்பான நிகழ்வுகள் நடத்தப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில் கொவிட் கொத்தணிகள் உருவாவதைத் தடுக்க முடியாது.
அதனால்தான் முடிந்தவரை வெகுஜன பேரணிகளை தவிர்க்குமாறு கோருகிறோம்” என பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.
0 Comments