Advertisement

Responsive Advertisement

அமெரிக்காவுக்கு ஓட நேரிடும்!! ராஜபக்சர்களுக்கு கடும் தொனியில் எச்சரிக்கை

 


மக்கள் அணி திரண்டு வீதிக்கு இறங்கினால் அனைத்தையும் சுருட்டிக் கொண்டு அமெரிக்காவுக்கு ஓட வேண்டி வரும் என்கிறார் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம (Kumara Welgama).

2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மீதான நேற்றைய விவாதத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

“நாடாளுமன்றத்தில் எம்.பிக்களது எண்ணிக்கை முக்கியமல்ல, பெரும்பான்மை ஆதரவு என்பதும் முக்கியமல்ல.

தற்போதைய அரசாங்கம் முறையாகச் செயற்படாவிட்டால் தோல்வியைச் சந்திக்க நேரிடும். இதனை ஐக்கிய மக்கள் சக்தியின் அண்மைய ஆர்ப்பாட்டம் அரசுக்கு கற்பித்துள்ளது.

மக்கள் எதிர்ப்பு எங்கிருந்து கிளம்பும் என்பதை எங்களால் சரியாக கூற முடியாது. அரசிடம் 150, 130, 140 என பெரும்பான்மை இருக்கலாம். இதனைப் பார்க்க மக்கள் எதிர்ப்பு பலமானது.

அவர்கள் அணிதிரண்டால் அனைத்தையும் சுருட்டிக் கொண்டு அமெரிக்காவுக்குச் செல்ல நேரிடும்” என கடும் தொனியில் எச்சரித்துள்ளார்

Post a Comment

0 Comments