வாழ்த்துகிறோம்!!!!!!!
கிழக்குப்பல்கலைக்கழக கல்வி, பிள்ளைநலத்துறை
தலைவர் கலாநிதி செ.அருள்மொழி கல்வித்துறைப் பேராசிரியராக இன்று நடைபெற்ற பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவின் இறுதித்தேர்வின் மூலமாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார். ஆசிரியராக, அதிபராக, உதவி/பிரதிக் கல்விப்பணிப்பாளராக, விரிவுரையாளராக, சிரேஷ்ட விரிவுரையாளராக, துறைத்தலைவராக பல்வேறு பதவிகளை வகித்து தற்போது கல்வித்துறைப்பேராசிரியராக பதவி உயர்த்தப்பட்டதை கல்விச் சமூகம் அவரை மனமார வாழ்த்துகின்றது.
கிழக்கு மாகாணத்தில் கல்வியில் கலாநிதிப்பட்டம் பெற்று பேராசிரியராக பதவி உயர்த்தப்படும் முதலாவது தமிழராக இவர் திகழ்கின்றமை காரைதீவு மக்களுக்கு கிடைத்த பெருமையாகும். இவரது சேவை கல்வி சமூகத்திற்கு மென்மேலும் கிடைக்கவேண்டும் என மனமார வாழ்த்துகிறோம்.
பழைய மாணவர்கள், ஆசிரியர்கள். மற்றும் அதிபர் கமு/விபுலாநந்த மத்திய கல்லூரி,காரைதீவு.
0 Comments