மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளரின் அறையினை முற்றுகையிட்டு போராட்டம் நடாத்திவருகின்றார்.
இதன்காரணமாக பட்டிப்பளை பிரதேச செயலகத்தின் நடவடிக்கைகள் முற்றாக முடங்கியுள்ளதை காணமுடிகின்றது.
பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கெவிழியாமடு பகுதியில் வனஇலாகாவுக்குரிய காணியை விகாரை அமைப்பதற்கு கோரியதாகவும் அதனை வழங்குவதற்கு தனக்க அதிகாரம் இல்லையென பிரதேச செயலாளர் தெரிவித்ததை தொடர்ந்தே இந்த போராட்டத்தினை குறித்த பிக்கு முன்னெடுத்துவருகின்றார்.
பிரதேச செயலாளரையும் ஊழியர்களையும் அச்சுறுத்தும் வகையில் குறித்த பிக்கு போராடிவருவதாகவம் பொலிஸார் அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தாமல் வேடிக்கைபார்ப்பதாகவும் குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்படுகின்றது.
அரசாங்க ஊழியர்களின் நடவடிக்கைக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் குறித்த பிக்கு செயற்படுகின்றபோதிலும் பொலிஸார் வேடிக்கைபார்க்கும் நிலையேயுள்ளது.
தற்போது ஒரு நாடு ஒரு சட்டம் அமுல்படுத்தப்படுவது இதுதானா எனவும் பொதுமக்கள் கேள்வியெழுக்கின்றனர்.
இதேநேரம் பிக்குவின் செயற்பாட்டினை கண்டித்து பிரதேச செயலகத்திற்கு முன்பாக உத்தியோகத்தர்கள் தற்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்
0 Comments