மட்டக்களப்பு மாவட்டத்தில் இரு வேறு பிரதேசங்களில் இடம் பெற்ற விபத்துக்களில் இருவர் பலியான சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஏறாவூர் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட செங்கலடி பிரதான வீதியில் வேகக்கட்டுப்பட்டை இழந்து முச்சக்கரவண்டியில் மோதியதால் களுவங்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த (32) வயதுடைய பத்மநாதன் சுஜீக்காந் என்பவர் செங்கலடி வைத்தியசாலை இருந்து மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கும் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.
அத்தோடு போரதீவு பிரதேசத்தைச்சேர்ந்த (29) வயதுடைய கந்தவேல்-நிஷாந்தன் என்பவர் தனது வீட்டிலிருந்து உன்னிச்சைக்குளத்திற்கு தனது நண்பர்களுடன் சென்று வீடு திரும்பும்போது தனது மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பட்டை இழந்து தடம் புரண்டதில் சம்பவ இடத்தில் பலியாகியுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிமன்ற நீதிவான் கே.ஜீவராணி அவர்களின் உத்தரவிற்கமைவான சம்பவ இடத்திற்கு சென்ற ஏறாவூர் பிரதேச திடீர் மரணவிசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நசீர் சம்பவ இடத்திற்கு சென்று சடலங்களை பார்வையிட்டதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்ல பொலிஸாருக்கு உத்தரவிட்டார்
மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
0 comments: