Home » » காய்ச்சல், தசை வலி உள்ளிட்ட நோய் அறிகுறிகள் உள்ளோருக்கு அவசர அறிவிப்பு

காய்ச்சல், தசை வலி உள்ளிட்ட நோய் அறிகுறிகள் உள்ளோருக்கு அவசர அறிவிப்பு

 


இலங்கையில் கோவிட் பெருந்தொற்றுக்கு இலக்கான நோயாளிகளின் எண்ணிக்கையில் சிறிதளவு வீழ்ச்சி பதிவாகி வரும் நிலையில் டெங்கு நோயாளிகள் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அதன்படி நேற்றைய தினம் மட்டும் 120 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக தெரியவருகிறது. 

கோவிட் தொற்றின் போது தென்படும் காய்ச்சல், தசை வலி உள்ளிட்ட நோய் அறிகுறிகள் டெங்கு நோயாளிகளுக்கும் காணப்படும் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் நிபுணத்துவ மருத்துவர் நிமால்கா பானிலாஹெட்டி தெரிவித்துள்ளார்.

நோய் அறிகுறிகள் தென்பட்டால் காலம் தாழ்த்தாது மருத்துவரை அணுகுமாறு அவர் மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். 

இந்த ஆண்டில் இதுவரையில் 22520 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த அக்டோபர் மாதத்தில் 2979 நோயாளிகள் பதிவாகியுள்ளனர். கொழும்பு மாவட்டத்தில் அதிகபட்சமாக இந்த ஆண்டில் மொத்தமாக 7346 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.

மேல் மாகாணத்தில் சுமார் 12000 இற்கும் மேற்பட்ட டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.

இந்த நிலையில் டெங்கு காய்ச்சல் தொடர்பில் மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டுமென மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |