திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில் பிரதான வீதியில் நேற்று நள்ளிரவு இடம்பெற்ற வீதி விபத்தில் 29 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அக்கரைப்பற்றில் இருந்து கோமாரியில் உள்ள தனது வீட்டுக்கு செல்லும் வழியில் தம்பிலுவில் சரஸ்வதி பாடசாலை அருகே உள்ள வளைவில் மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகே உள்ள மதிலில் மோதியதில் இவ் விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கோமரியில் வசிக்கும் இரண்டு பிள்ளைகளின் தந்தையான புலேந்திரன் ( 29 வயது) என்பவரே இவ் விபத்து சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
சடலம் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் . மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments