மட்டக்களப்பு,காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குடாவில் இலங்கை போக்குவரத்துசபை பேருந்து மோதியதன் காரணமாக இன்று காலை இடம்பெற்ற விபத்தில் வயோதிபர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கல்முனையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி வந்த பஸ் நாவற்குடாவில் பிரதான வீதியில் உள்ள யு வளைவில் மோட்டார் சைக்கிளை திருப்ப முனைந்தவர் மீது மோதியுள்ளது.
சம்பவத்தின்போது நொச்சிமுனையை சேர்ந்த சிவசம்பு சிவநேசதுரை என்னும் 70வயதுடைய ஓய்வுபெற்ற அதிபர் ஒருவரே படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்தின்போது மோட்டார் சைக்கிள் முழுமையாக சேதடைந்துள்ளதாகவும் இது தொடர்பில் பேருந்து சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
0 Comments