Advertisement

Responsive Advertisement

மட்டக்களப்பில் பால்மா பக்கற்றுக்களை விநியோகம் செய்ய நடவடிக்கை

 


நாடெங்கும் பழைய விலையில் பால்மா பக்கற்றுக்களை கூட்டுறவு விற்பனை நிலையங்கள் ஊடாக பொதுமக்களுக்கு விற்பனை செய்வதற்கான நடவடிக்கையினை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.


ஜனாதிபதியின் பணிப்பின்பேரில் கூட்டுறவு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ணவினால் இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு அரசடியில் உள்ள கூட்டுறவு அபிவிருத்தி சபை வளாகத்திற்கு கொண்டுவரப்பட்ட பால்மா பக்கற்றுக்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 16கூட்டுறவு விற்பனை நிலையங்களுக்கு பகிர்ந்தளிக்கும் செயற்பாடுகள் இன்று காலை முன்னெடுக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் கே.வி.தங்கவேல் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையில் கூட்டுறவு அபிவிருத்தி சபை உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 16கூட்டுறவு விற்பனை நிலையங்கள் ஊடாகவும் நாளை முதல் பால்மா பக்கற்றுக்களை பொதுமக்களுக்கு வழங்கும் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் கே.வி.தங்கவேல் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments