ஆரம்பப் பிரிவு மாணவர்கள், தமக்குப் பொருத்தமான எந்த ஆடையிலும் நாளை (25) பாடசாலைக்குச் சமுகமளிக்க அனுமதிக்கப்படுவர் என்று கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார்.
நீண்ட காலம் அமுல்படுத்தப்பட்டிருந்த முடக்கத்துக்குப் பின்னர், பாடசாலை சீருடை மற்றும் கல்வி உபகரணங்களை வாங்க முடியாத மாணவர்களின் சார்பாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
200க்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொண்ட அனைத்துப் பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவுகளும் நாளையதினம் மீண்டும் திறக்கப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
0 comments: