இன்று முதல் பாடசாலைகளுக்கு அருகில் சிறப்பு காவல்துறை அதிகாரிகளை நியமிக்க தேவையில்லை என பொது பாதுகாப்பு அமைச்சர் ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் சரத் வீரசேகர (Sarath Weerasekara) கூறினார்.
ஆசிரியர்களின் பணிப்பகிஸ்கரிப்பு காரணமாக கடந்த 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் கடமைக்கு சமூகமளித்த ஆசிரியர் குழுவினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய,
குறித்த இரண்டு நாட்கள் பாடசாலைகளுக்கு அருகில் சிறப்பு காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.
எனினும், அத்தகைய நடவடிக்கை இனி தேவையில்லை என்று அமைச்சர் கூறினார்.
கடமைக்கு சமூகமளிக்க வேண்டாம் என ஆசிரியர் அதிபர்கள் குழுவை தொலைபேசியில் அச்சுறுத்தியவர்களுக்கு காவல்துறையினர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
0 Comments