முந்தல் – தேவாலய சந்தி பகுதியில் பிறந்து இரண்டு மாதங்களேயான குழந்தை, பூரான் கடித்து உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று(22) அதிகாலை குழந்தையிடமிருந்து எந்த அசைவுகளும் இல்லாத நிலையில், முந்தல் வைத்தியசாலைக்கு குழந்தையை பெற்றோர் எடுத்துச் சென்றுள்ளனர்.
எனினும் குழந்தை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்படுவதற்கு முன்னதாகவே உயிரிழந்திருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
பூரான் கடித்தமையே குழந்தையின் மரணத்துக்குக் காரணம் என்று தெரியவந்துள்ளது.
0 Comments