மட்டக்களப்பு மாநகர ஆணையாளருக்கு எதிராக மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவனால் மட்டக்களப்பு உயர் நீதி மன்றில் தாக்கல் செய்யப்பட்ட அவமதிப்பு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது . இதன் போது ஆணையாளருக்கு ஏற்பட்ட செலவீனங்களையும் செலுத்த வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது .
இதற்கு முன்னர் மாநகர முதல்வரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் 01.04.2021 ல் மாநகர நிருவாகம் எப்படி செயற்பட்டதோ அது போன்றே செயற்பட வேண்டும் என நீதிமன்றினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போதும் மாநகர ஆணையாளர் 10 லட்சம் ரூபா சரீர பிணையில் வெளிவந்ததாக செய்திகள் வந்திருந்தன , மாநகர ஆணையாளர் நீதிமன்ற உத்தவிற்கமைய தனது பணியை செயற்படுத்தி வந்திருந்தார் , இது தொடர்பாக மாநகர முதல்வரால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்று ஆணையாளருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட போதும் அவை 21.10.2021 அன்று மேல் நீதி மன்றத்தினால் நிபந்தனை இன்றி தள்ளுபடி செய்யப்பட்டதாக ஆணையாளர் தெரிவித்தார்.
வழக்கு தள்ளுபடியானதை தொடர்ந்து மாநகர ஊழியர்கள் வெடிகொளுத்தி தமது மகிழ்ச்சியை வெளியிட்டனர்.
0 Comments