ஒரு கிலோகிராம் பால்மா விலையை 200 ரூபாவால் அதிகரிக்குமாறு முன்வைத்த கோரிக்கைக்கு, நுகர்வோர் விவகார அதிகார சபையும் வாழ்க்கைச் செலவு குழுவும் அனுமதி வழங்கியுள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதற்கான அமைச்சரவை பத்திரம் நாளை (04) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் பால்மா இறக்குமதியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கொழும்பு துறைமுகத்தில் சிக்கியுள்ள பால்மாவை உடனடியாக விடுவித்து, பால்மா தட்டுப்பாட்டை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
0 comments: