அனைத்து பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதை ஊக்கப்படுத்துமாறு குழந்தைகளுக்கான லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையின் குழந்தை நல வைத்தியர் தீபால் பெரேரா கேட்டுக்கொண்டார்.
இதுகுறித்து மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 83 வீதமானவர்களுக்கு தடுப்பூசி செலுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
12 முதல் 19 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக ஃபைசர் தடுப்பூசிகளை ஏற்றும் நடவடிக்கை ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதை ஊக்கப்படுத்துமாறு அனைத்து பெற்றோர்களுக்கும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்
0 Comments