Home » » கொரோனாவின் பின்னர் ஏற்படும் ஆபத்தான 9 அறிகுறிகள்

கொரோனாவின் பின்னர் ஏற்படும் ஆபத்தான 9 அறிகுறிகள்

 


கொரோனா தொற்றுக்கு உள்ளாகும் மனிதர்களிடையே 3 மாதங்கள் முதல் 6 மாதங்கள் வரையான காலப் பகுதிக்குள் ஏற்படும் 9 விதமான நீண்ட கால நோய் அறிகுறிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சிறிஜயவர்தனபுர பல்கலைக்கழக நோய் எதிர்ப்பு, ஒவ்வாமை பிரிவின் பிரதானி வைத்தியர் சந்திம ஜீவந்தர (Chandima Jeevanthara) தெரிவித்துள்ளார்.

மூச்சு எடுக்க சிரமப்படல், வயிற்று நோய் அறிகுறிகள், மன அழுத்தம், நெஞ்சு மற்றும் தொண்டை வலி, அறிவாற்றல் பிரச்சினைகள், சோர்வு, தலைவலி, தசை வலி மற்றும் ஏனைய வலிகள் என 9 விதமான நோய் ஏற்படும் அறிகுறிகள் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த நோய் அறிகுறிகளில் மன அழுத்தமானது 15 வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

* சிரமமாக மூச்சு எடுத்தல் - 8%

* வயிற்று நோய் அறிகுறிகள் - 8%

* மன அழுத்தம் - 15%

* நெஞ்சு மற்றும் தொண்டை வலி - 6%

* அறிவாற்றல் பிரச்சினைகள் - 4%

* சோர்வு - 6%

* தலைவலி - 5%

* தசை வலி - 1.5 %

* ஏனைய வலிகள் - 7%

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |