Advertisement

Responsive Advertisement

பசிலின் கன்னி வரவு செலவுத் திட்டம் நவம்பரில் நாடாளுமன்றத்திற்கு

 


எதிர்வரும் 2022 ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இது இலங்கை நிதியமைச்சர் பசில் ராஜபக்சவின்(Basil Rajapaksha) கன்னி வரவு செலவுத் திட்டமாகும்.

கடந்த வாரம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் வரவு செலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.

எது எப்படி இருந்த போதிலும் இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் வரி அறவீடுகள் அதிகரிக்கப்படலாம் எனவும் பொது மக்களுக்கு வழங்கப்படும் மானியங்கள் குறைக்கப்படலாம் எனவும் தகவல்கள் கூறுகின்றன.

அத்துடன் மொத்த தேசிய வருமானத்தை விட செலவுகள் அதிகரித்துள்ளதாக வரவு செலவுத்திட்டத்தின் துண்டு விழும் தொகை கணிசமாக அதிகரிக்கலாம் எனவும் அரசியல் தரப்புத் தகவல்கள் கூறுகின்றன. 

Post a Comment

0 Comments