கொழும்பு மாநகர எல்லைக்குள் வசிக்கும் நபர்களுக்கு இலவச அன்டீஜன் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
பொரள்ளை கெம்பல் பார்க் மைதானத்தில் இன்று இந்த பரிசோதனை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.
சுகாதார அமைச்சு மற்றும் கொழும்பு மாநகர சபை இணைந்து இந்த திட்டத்தை முன்னெடுத்துள்ளன.
சந்தேகத்திற்கிடமான மற்றும் நோய் அறிகுறிகள் தென்படுகின்ற கொழும்பு மாநகர எல்லைக்குள் உள்ள எந்தவொரு நபரும் இந்த இடத்திற்கு வருகைத் தந்த அன்டீஜன் பரிசோதனையை நடத்திக் கொள்ள முடியும் என சுகாதார தரப்பு அறிவித்துள்ளது,
இந்த பரிசோதனை நடவடிக்கை முற்பகல் 9 மணி முதல் 11 மணி வரை முன்னெடுக்கப்படுகின்றன.
0 Comments