கட்டுகஸ்தோட்டை வைத்தியசாலையில் பணியாற்றிய மருத்துவர் ஒருவர் கொவிட் -19 தொற்றுக்குள்ளாகி பேராதனை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் டொக்டர் அர்ஜுன திலகரத்ன தெரிவித்தார்.
கட்டுகஸ்தோட்டை மாவில்மட பகுதியில் வசிக்கும் செய்த் ரபாதீன்என்ற மருத்துவரே உயிரிழந்தவராவார். கொடிய வைரஸால் பாதிக்கப்பட்டு, ஓகஸ்ட் 18 அன்று பேராதனை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
கடந்த மூன்று வாரங்களாக தீவிர சிகிச்சைப் பிரிவில் (ஐசியு) சிகிச்சை பெற்று வந்தார். அவரது உயிரைக் காப்பாற்ற பேராதனை மருத்துவமனை ஊழியர்கள் கடுமையான முயற்சி மேற்கொண்டனர், ஆனால் மரணம் அவரது விலைமதிப்பற்ற உயிரைப் பறித்தது என்று டொக்டர் திலேகரத்ன கூறினார்.
இன்று மட்டக்களப்பில் உள்ள ஓட்டமாவடி புதைகுழியில் அடக்கம் செய்வதற்காக உடல் கொண்டு செல்லப்பட உள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்
0 comments: