கட்டுநாயக்க மற்றும் மத்தள சர்வதேச விமான நிலையங்களின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விமான நிலையங்களின் மீது தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக கிடைக்கப் பெற்ற தகவலை அடுத்;து, நேற்றைய தினம் (15) முதல் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் நேற்று முன்தினம் (14) விமான நிலையத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு கிடைக்கப் பெற்ற தகவலை அடுத்து, இவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
கிடைக்கப் பெற்ற தகவல் உறுதிப்படுத்தப்படாத தகவல் என்ற போதிலும், முன்னெச்சரிக்கை ஏற்பாடாக பாதுகாப்பை அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இலங்கை விமானப்படை, பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படை இணைந்து இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐ.எஸ்.ஐ.எஸ் மற்றும் தலிபான் அமைப்புக்களின் கொள்கைகளை பின்பற்றுவோர் இந்த நாட்டில் இருக்கக்கூடும் என்ற நிலையில், இந்த விடயம் தொடர்பில் அதிக கவனம் செலுத்துமாறு பொலிஸார், புலனாய்வு பிரிவிற்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
0 Comments