Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

எதிர்வரும் நாட்களில் கோதுமை மா, சீமெந்து விலை தொடர்பான இறுதி தீர்மானம் எட்டப்படும்

     


திர்வரும் நாட்களில் கோதுமை மா மற்றும் சீமெந்து விலை தொடர்பான இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சரான லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

விலையை அதிகரிக்க ஒப்புதல் வழங்கப்பட்டால், பற்றாக்குறையின்றி பொருட்களின் விநியோகத்தை பராமரிக்க முடிந்தால் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் ஆலோசிக்கப்படும்.

உலகளாவிய சந்தை விலை உயர்வு காரணமாக, பால்மா , கோதுமை மா மற்றும் சீமெந்து நிறுவனங்கள் பலமுறை விலை உயர்வை கோரியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நுகர்வோர் விவகார அதிகாரசபையின் தலைவர் மற்றும் பணிப்பாளர்கள் குழு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.

விலை உயர்விற்கு அனுமதி வழங்கப்பட்டால் , குறைந்த பட்சம் மூன்று மாதங்களுக்கு விலை உயர்வு கோருவதைத் தவிர்க்கவும், குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கு தாய் நிறுவனங்களிடமிருந்து போதுமான கையிருப்புக்களை இறக்குமதி செய்ய வேண்டும் என நிறுவனங்களை அவர்கள் கேட்டுக்கொண்டதாகவும் இராஜங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments