தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ஒரு மாதத்திற்குப் பின்னர், கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் கணிசமான குறைவு ஏற்பட்டுள்ளது. அத்துடன், குறித்த காலப்பகுதியில் கொவிட் உயிரிழப்புகளின் எண்ணிக்கையிலும் 40 வீத வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தொற்றுநோயியல் பிரிவு வெளியிட்ட தரவுகளில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, செப்டம்பர் 18ம் திகதியுடன் முடிவடைந்த கடந்த 28 நாட்களில் கொவிட் நோய்த்தொற்றாளர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
ஆகஸ்ட் 22ம் திகதி தொடங்கி முதல் 7 நாட்களில் 1309 கொவிட் இறப்புகள் பதிவாகியிருந்தன. ஆகஸ்ட் 29 தொடங்கி ஏழு நாட்களில் பதிவான கொவிட் இறப்புகளின் எண்ணிக்கை 1365 ஆகும்
0 Comments