Advertisement

Responsive Advertisement

மட்டக்களப்பில் 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுப்பு!

     


ட்டக்களப்பு- களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதிகளில், 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள், இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முதல் முன்னெடுக்கப்படுகின்றன.


களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.இராஜேந்திராவின் தலைமையில், பெரியகல்லாறு, செட்டிபாளையம் ஆகிய பகுதிகளில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில் பெரியகல்லாறிலுள்ள அருளானந்தர் வித்தியாலயம், உதயபுரம் தமிழ் வித்தியாலயம் ஆகியவற்றில் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டன.

இதில், பெருமளவான இளைஞர் மற்றும் யுவதிகள் ஆர்வத்துடன் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள நீண்ட வரிசையில் காத்திருந்ததை காணமுடிந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலும் 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசிகள் வழங்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நா.மயூரன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments