முழுமையாக தடுப்பூசி போட்டுள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை தங்கள் நாட்டுக்குள் அனுமதிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
வரும் நவம்பர் மாதம் முதல் அமெரிக்கா செல்லும் வெளிநாட்டினர் தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான சான்றிதழையும், விமானம் ஏறுவதற்கு மூன்று நாட்களுக்கு முன் எடுத்த கொரோனா நெகட்டிவ் சான்றையும் அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முழுமையாக தடுப்பூசி செலுத்திய பயணிகள் தங்களைத் தனிமைப்படுத்த தேவையில்லை என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் எந்தவகையான தடுப்பூசிகள் அங்கீகரிக்கப்படும் என்று தெளிவாக வரையறுக்கப்படவில்லை
0 Comments