Home » » பரீட்சை சுட்டெண்ணை மறந்த மாணவர்களுக்கான விசேட அறிவிப்பு!

பரீட்சை சுட்டெண்ணை மறந்த மாணவர்களுக்கான விசேட அறிவிப்பு!


 2020ம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் நேற்றிரவு வெளியான நிலையில், மாணவர்களில் பெரும்பாலானோர் தமது சுட்டெண்ணெ மறந்துள்ளமை குறித்து தகவல் கிடைத்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவிக்கின்றார்.


அவ்வாறு தமது சுட்டெண்ணை மறந்த மாணவர்கள், தேசிய அடையாளஅட்டை இலக்கத்தை பயன்படுத்தி, தமது பரீட்சை பெறுபேறுகளை பார்வையிடவோ அல்லது தரவிறக்கம் செய்துக்கொள்ளவோ முடியும் என அவர் அறிவித்துள்ளார்.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும், பெறுபேறுகளை பார்வையிட முடியும் என தெரிவித்த அவர், அதற்காக பணம் செலுத்த வேண்டிய அவசியம் கிடையாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் காணப்படுமாயின், அது தொடர்பில் அறிந்துக்கொள்வதற்கு விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

011 2 784 208
011 2 784 537
011 3 140 314

1911
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |