Advertisement

Responsive Advertisement

முதலாம் திகதி நாடு திறப்பு: வழிகாட்டி வெளியானது!

 


எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு தளர்த்தப்படும் என்ற எண்ணத்தை அடிப்படையாகக் கொண்டு, பொது போக்குவரத்து சேவைகளுக்கான சுகாதார வழிகாட்டி தயாரிக்கப்பட்டுள்ளதாக அனைத்து மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.


தம்புள்ளை நகரில் நேற்று (23) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைத்த சங்கத்தின் ஏற்பாட்டாளர் நிலந்த ஏக்கநாயக்க இதனைக் குறிப்பிட்டார்.

கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து தனியார் பஸ் உரிமையாளர்களுக்கும் 50,000 ரூபா பெறுமதியாக நிவாரணமொன்றை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்

Post a Comment

0 Comments