Home » » கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய மஹோற்சவம் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு...!!

கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய மஹோற்சவம் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு...!!

 


மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற தேரோடும் ஆலயமான 

கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவமானது நாட்டில் நிலவும் அதிகரித்த கொரோனா தொற்று காரணமாக எந்தவொரு நிகழ்வுகளும் நடாத்த முடியாது என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து, பட்டிப்பளை பிரதேச செயலகத்தில் கொக்கட்டிச்சோலை ஆலய நிர்வாகம் விடுத்த மீள் பரிசீலனையின் நிமிர்த்தம் 03/09/2021அன்று முடிவுகளின் படி நாட்டின் சூழ் நிலையைக் கருத்திற் கொண்டு பணியாக்கள் 15 பேர் மாத்திரம் ஆலயத்தினுள் உட்சென்று 08/09/2021 கொடியேற்றமும் ஸ்நபன கிரிகைகளும் பூசைகளும் ஆலயத்தினுள் நடைபெற்று உள் வீதி திருவிழா மாத்திரம் வலம் வந்து 27/09/2021 நிறைவடையும் என் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வுகள் தேரோட்ட உற்சவ நிகழ்வாக அமையாது எனவும் நாட்டில் நிலவும் கொடிய கொரோனா நோய் தொற்று மற்றும் மரணங்களில் இருந்து மக்கள் விடுபட்டு நல் வாழ்வு வாழ்வதற்காகவும் இந்த செயற்பாடுகள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்துடன் மக்களின் நலன் கருதி எவரும் எக் காரணம் கொண்டும் குறித்த ஆலய நிகழ்வுகளில் கலந்து கொள்ள முடியாது எனவும், தங்களின் வீடுகளிலே இருந்து வழிபாடுகளை செய்யுமாறும் ஆலய நிர்வாக சபையினர் பொது மக்களிடம் இறையன்புடன் அறியத்தருகின்றனர்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |