Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பிலும் ஒன்று திரண்ட கல்விச்சமுகம்

 


பல்கலைக்கழக ஆணைக்குழுவை சுயாதீனமாகவும் அதிகாரம் மிக்கதாகவும் மாற்றி கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டத்தை கிழித்தெறி எனும் தொனிப்பொருளில் இன்று காலை பத்து முப்பது மணி அளவில் மட்டக்களப்பில் மாபெரும் கண்டன பேரணி ஒன்று இடம்பெற்றுள்ளது.

பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் இலங்கை ஆசிரியர் சங்கம் மற்றும் சிவில் சமூகம் இணைந்து இன்றைய தினம் ஒன்றிணைவோம் உரிமை வென்றெடுப்போம் என்ற கோஷத்துடன் குறித்த கண்டனப் பேரணியை முன்னெடுத்துள்ளனர்.

மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இருந்து பேரணியாக ஆரம்பித்து மட்டக்களப்பு கல்லடி பாலத்துக்கு அருகாமையில் போராட்டத்தை முடித்துள்ளனர். ஆசிரியர்களின் போராட்டம் நாடுதழுவிய ரீதியாக இடம்பெற்று வருகின்ற நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்றைய தினம் அனேகமானோர் ஆதரவு வழங்கியுள்ளனர்.

இதன்போது கொத்தலாவல சட்டத்தை கல்வியில் திணிக்காதே இலவச கல்வியை பறிக்காதே என பல கோஷங்களுடன் போராட்டக்காரர்கள் பதாதைகள் தாங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments