Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பில் நீண்டகாலமாக இராணுவ வசமிருந்த காணி உரிமையாளரிடம் ஒப்படைப்பு!!


 நீண்டகாலமாக இராணுவ முகாம் அமைந்திருந்த தனியாருக்கு சொந்தமான காணியினை உரிமையாளரிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது.


ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைப் பிரகடனத்திற்கு அமைவாக யுத்த காலங்களில் இராணுவ பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக கையகப்படுத்தப்பட்ட தனியார் காணிகளை உரிமையாளர்களுக்கு உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டு வருகிறது.

இதனடிப்படையில் மட்டக்களப்பு கும்புறுமுலை பகுதியில் நீண்டகாலமாக இராணுவமுகாம் அமையப்பெற்றிருந்த சுமார் 12 ஏக்கர் காணியே இன்று உரிமையாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இராணுவத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்வானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய பிரதம அதிதியாக கலந்துகொண்டு மாவட்ட அரசாங்க அதிபருடன் இணைந்து குறித்த காணியை உரிமையாளரிடம் கையளித்திருந்தார்.

மேலும் இந்நிகழ்வில் 23 வது படைப்பிரிவின் கொமாண்டர் மேஜ ஜெனறல் நலின் கொஸ்வத்த, 231 வது படைப்பிரிவின் பிறிகேட் கொமாண்டர் வீ.எம்.என்.எட்டியாராச்சி, மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் எல்.ஆர்.குமாரசிறி, பிரதேச செயலாளர்களான எஸ்.ராஜ்பாபு, கே.தனபாலசுந்தரம், வாழைச்சேனை பொலிஸ் பொறுப்பதிகாரி உள்ளிட்ட அரச அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர்.

Post a Comment

0 Comments