Advertisement

Responsive Advertisement

கொரோனாவால் 12 வயதுடைய பாடசாலை மாணவி உயிரிழப்பு

 


கொரோனா வைரஸ் தொற்றினால் மெலுமொரு பாடசாலை மாணவி உயிரிழந்துள்ளார்.


நாவல ஜனாதிபதி மகளிர் கல்லூரியில் 7 ஆம் தரத்தில் கல்வி கற்கும் 12 வயதுடைய அபிமானி நவேத்யா சேரசுந்தர எனும் சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

ராஜகிரிய பகுதியை சேர்ந்த இவர், கடந்த வாரம் சுகயீனம் காரணமாக கொழும்பு ரிஜ்வே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதன்போது அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் குறித்த சிறுமிக்கு தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டிருந்தது.

இதனையடுத்து, தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றினால் இதற்கு முன்னர் இரு பாடசாலை மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments