ஆப்கானிஸ்தானில் நிலவும் வறட்சி, உடனடியாக வரவுள்ள குளிர்காலம், கொவிட் பெருந்தொற்று, மற்றும் ஆட்சி மாற்றம் ஆகியவற்றால் அங்கு, மனிதாபிமான நிலை மேலும் மோசமடையும்' என, ஐ.நா.,வின் குழந்தைகளுக்கான அமைப்பான யுனிசெவ் கவலை தெரிவித்துள்ளது.
யுனிசெவ் பணிப்பாளர் ஹென்ரிட்டா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
ஆப்கானிஸ்தானில் ஏற்கனவே ஒரு கோடி குழந்தைகள் மனிதாபிமான உதவிகளுடன்தான் வாழ்ந்து வருகின்றனர். இந்த ஆண்டு 10 இலட்சம் குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. 22 இலட்சம் சிறுமிகள் உள்பட 42 இலட்சம் சிறுவர்கள் பாடசாலைக்கு செல்லும் வாய்ப்பை இழந்துள்ளனர்.
ஆப்கன் குழந்தைகள் எதிர்கொள்ளும் கசப்பான உண்மை இது. தற்போதைய அரசியல் மாற்றங்களால் இது மேலும் மோசமடையும்.
இருந்தும் நாங்கள் அங்கு சென்றடைய முடியாத பகுதிகளுக்கும் சென்று உதவிகளை அளிக்க இருக்கிறோம். இவ்வாறு அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
0 Comments