Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு- வவுணதீவு பிரதேச வறுமைக்கோட்டின் கீழ் உள்ள கர்ப்பிணித் தாய்மார்களுக்கு பிரசவகால பயன்பாட்டுப் பொருட்கள் வழங்கிவைப்பு...!!

 


மட்டக்களப்பு- வவுணதீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவிற்குட்பட்ட வறுமைக்கோட்டின் கீழ் உள்ள கர்ப்பிணித் தாய்மார்களுக்கான பிரசவகால பயன்பாட்டுப் பொருட்கள் இன்று சனிக்கிழமை வழங்கிவைக்கப்பட்டுள்ளது.


மட்டக்களப்பு சமூக நலன் விரும்பி இளைஞர்களால் குறித்த பிரசவகால பயன்பாட்டுப் பொருட்கள் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

மண்முனை மேற்கு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி தி.ஜோதிலட்சுமி தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் 12 கர்ப்பிணி தாய்மார்களுக்கு குறித்த பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.

கொரோனா தொற்று நிலைமை காரணமாக கர்ப்பிணித் தாய்மார்கள் பொருளாதார நெருக்கடியில் பாதிக்கப்பட்டுள்ள நிலையினை கருத்திற்கொண்டு இப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments