Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

பிலிப்பைன்ஸ்ஸை உலுக்கிய விமான விபத்து! பலர் பலி


பிலிப்பைன்ஸின் தெற்குப் பகுதியில் இருந்து 85 பேருடன் சென்ற இராணுவ விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியதாக அந்நாட்டு இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

பிலிப்பைன்ஸ் விமானப் படைக்கு சொந்தமான C130 ரக விமானமொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விமானம் பயணத்தை ஆரம்பித்த சில நிமிடங்களில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்ததாக அந்நாட்டு பாதுகாப்பு பிரிவின் தலைவர் ஜெனரல் சிரிலிட்டோ சோபேஜனா தெரிவித்துள்ளார்.

தொழில்நுட்ப கோளாறு தென் பிலிப்பைன்ஸில் ஜோஜோ தீவில் தரையிறங்க முற்பட்ட போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

குறித்த விபத்தில் சிக்கியவர்களில் 40 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாகவும் மீட்பு பணிகள் தொடர்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

Post a Comment

0 Comments