Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

அட்டாளைச்சேனையில் பிரதான வீதியில் மண்லொறி துவிச்சக்கர வண்டியில் மோதியதில் ஒருவர் மரணம் !

 


அட்டாளைச்சேனை பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


வீதி திருத்த வேலைகளுக்கு அமர்த்தப்பட்டிருந்த மண்லொறி பிரதான வீதியினால் சென்று கொண்டிருந்த நிலையில் முன்னால் துவிச்சக்கரவண்டியில் சென்ற நபரை மோதியுள்ளது.

மண்லொறி தப்பிச் சென்று விபத்து இடம்பெற்ற பகுதியில் இருந்து ஒரு கிலோ மீற்றர் தூரத்தில் நின்றதுடன் அதன் சாரதி தப்பி சென்றிருந்தார்.

விபத்தில் படுகாயமடைந்த துவிச்சக்கர வண்டியில் பயணம் செய்தவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்தின் சிசிடிவி காட்சியும் பெறப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பாக அக்கரைப்பற்று பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தப்பி சென்ற சாரதியை கைது செய்வதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments