Advertisement

Responsive Advertisement

மட்டக்களப்பு- பட்டிப்பளை பிரதேசத்தில் கடுக்காமுனை குளத்து நீரினை பயன்படுத்தி இடைப்போக பயிர்ச்செய்கை மேற்கொள்வது தொடர்பான ஆரம்ப கூட்டம்!!

 


மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேசசெயலக பிரிவுக்குட்பட்ட கடுக்காமுனை குளத்து நீரினை பயன்படுத்தி இடைப்போக பயிர்ச்செய்கையினை மேற்கொள்வது தொடர்பான ஆரம்ப கூட்டம் கடுக்காமுனை பகுதியில் இன்று(23) காலை நடைபெற்றது.


இக்கூட்டத்தில் பட்டிப்பளை பிரதேச செயலக பிரிவில் கடுக்காமுனை குளத்து நீரினை பயன்படுத்தி இடைப்போக பயிர்ச்செய்கையினை மேற்கொள்வதற்கு 300 ஏக்களர் நிலப்பரப்பு நீர்ப்பாசன தினைக்களத்தினால் தெரிவுசெய்யப்பட்டு 4 கன்டங்களுக்கு அதாவது கடுக்காமுனை, பண்டாரியாவெளி, படையாண்டவெளி மற்றும் படையாண்டகுளம் ஆகிய கண்டங்களுக்கு எத்தனை ஏக்கர் நிலப்பரப்பு தேவை என்பதனை விவசாயிகளிடம் இருந்து முன்மொழிவுகளைபெற்று நிலப்பரப்புக்களை 4 கண்டங்களுக்கும் வழங்குவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டது.

இதனடிப்படையில் கடுக்காமுனை, பண்டாரியாவெளி மற்றும் படையாண்டவெளி ஆகிய கண்டங்களுக்கு தலா 90 ஏக்கர் நிலப்பரப்பும் படையாண்டகுளம் கண்டத்திற்கு 30 ஏக்கர் நிலப்பரப்பும் ஒதுக்கப்பட்டுள்ளது அத்தோடு விதைக்கப்படும் நெல்லினம் விதைப்பு ஆரம்ப மற்றும் முடிவு திகதி தண்ணீர் விடும் திகதி உழவுக்கூலி ஏக்கருக்கான அறுவடைக்கூலி என்பற்றுக்கான தீர்மானங்களும் மேற்கொள்ளப்பட்டு ஏகமனதாக அனைத்து கண்ட விவசாயிகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் பணிப்புரைக்கு அமைய மாகாண நீர்ப்பாசன பணிப்பாளர் கணேசலிங்கம் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் ராஜகோபாலசிங்கம், பிரதேச நீர்ப்பாசண பொறியியலாளர் சுபாகரன், பட்டிருப்பு பிரிவு உதவியாளர் மதியழகன், கமநலதிணைக்கள மாவட்ட உதவி பணிப்பாளர் ஜகநாத், பட்டிப்பளை பிரதேச செயலாளர் தட்சனாகௌரி தினேஸ், பட்டிப்பளை பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் பிரபாகன், பட்டிப்பளை பிரதேச சபை தவிசாளர் புஸ்பலிங்கம், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் மற்றும் பட்டிப்பளை பிரதேச செயலக பிரிவுக்கட்பட்ட பகுதி விவசாயிகள் அகியோர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments