Advertisement

Responsive Advertisement

மற்றுமொரு சிறுமி துஷ்பிரயோகம் – ரிஷாட்டின் மனைவியின் சகோதரர் கைது

 


நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மனைவியின் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டில் சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமையவே மற்றுமொரு சம்பவம் தெரிய வந்துள்ளது.

இதன்போது, கடந்த 2015ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டில் பணி புரிந்து வந்த பணிப்பெண் ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்

44 வயதுடைய மதவாச்சி பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்

22 வயதுடைய குறித்த பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவந்துள்ளது

Post a Comment

0 Comments