Advertisement

Responsive Advertisement

மட்டக்களப்பு மாவட்டத்தில் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள்

 


மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இரண்டு தினங்களில் இரண்டு இலட்சம் சினோபாம் தடுப்பூசிகள் கிடைக்கப்பெறவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.


நாளை முதல் மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 சுகாதார வைத்திய அதிகாரி அலுலகம் ஊடாக 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் ஏற்றப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் கருத்து வெளியிட்ட அமட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 28 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் இருவர் மரணமடைந்துள்ளதாக தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரையில் 7863கொரனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் 112பேர் மரணமடைந்துள்ளதுடன் 6100பேர் குணமடைந்து வீடுசென்றுள்ளனர்.


கடந்தவாரம் மாத்திரம் 471 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரையில் 78000தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளதுடன் 60வயதுக்கு மேற்பட்ட 90 வீதமானவர்களுக்கு தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளதாகவும் டாக்டர் மயூரன் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments