திம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் -நுவரெலியா பிரதான வீதியில் டெவோன் நீர்வீழ்ச்சியில் இருந்து கீழே விழுந்த 19 வயதான இளம் யுவதி ஒருவர் காணாமல் போயுள்ளதாக பதன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
4 இளம் யுவதிகள் நீர்வீழ்ச்சியை பார்வையிட வந்து நீர்வீழ்ச்சியின் உச்சிக்கு சென்றுள்ளனர்.
இதன்போது, நீர்வீழ்ச்சியின் உச்சியில் உள்ள தண்ணீரில் கால்களைக் கழுவச் சென்றபோது அவர்களில் ஒருவர் திடீரென வழுக்கி மேலே இருந்து கீழே விழுந்ததாக தெரிய வந்துள்ளது.
இவ்வாறு கீழே விழுந்தவர் லிந்துலையில் வசிக்கும் பவித்ரா என்ற 19 வயதுடைய யுவதி என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
97 மீட்டர் உயரமுள்ள டெவோன் நீர்வீழ்ச்சியின் கீழ் பகுதி ஒரு பெரிய பாறை பகுதி என்று கூறப்படுகிறது. இதேவேளை, அண்மையில் நீர்வீழ்ச்சியில் நீர்மட்டம் மிக அதிகமாக இருப்பதாகவும் அப்பகுதியில் வசிப்பவர்கள் கூறுகின்றனர்
0 Comments