12 வயதுக்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கு கவனம் செலுத்தப்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜெயசுமன தெரிவித்தார்.
மேலும், 18 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு விரைவில் தடுப்பூசி வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.
நாங்கள் முதலில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட்டோம். பின்னர் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட்டோம்.
அதன்பிறகு 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசியை பெற்றுக்கொடுப்பதற்கும், 12 வயதுக்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசியை பெற்றுக் கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுப்போம்.
இதை ஒரு ஒழுங்கான முறையில் நாம் செய்ய வேண்டும் என்றார்.
0 Comments