உயர்தர மற்றும் புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பில் கல்வியமைச்சர் வெளியிட்ட தகவல் கல்விப் பொதுத் தராதர பத்திர உயர்தரம் மற்றும் தரம்-5 புலமைப்பரிசில் பரீட்சைகள் நடத்தப்படும் தினம் பற்றிய இறுதித் தீர்மானம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்படும் என அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அதன்படி 5 ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சையை எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, க.பொ.த. உயர்தரப் பரீட்சையை நவம்பர் மாதம் 15 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி வரை நடத்த தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு
0 Comments